×

திருக்குறள் விளையாட்டு போட்டி

 

தஞ்சை, ஜூலை 26: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், மாணவர் நல மையம் சார்பில் துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில், திருக்குறளை முன் வைத்து முத்தமிழ், முப்பால், முக்கடல் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.இதில் முத்தமிழ், முப்பால், முக்கடல் என்பது ஒரு முப்பரிமாண குழுவினரின் திறன் வெளிப்பாட்டைக் குறிக்கும். திருக்குறளின் முதல் 108 அதிகாரத்தை 108 மாணவர்களுக்கு தலா ஒரு அதிகாரம் என பிரித்துக் கொடுக்கப்பட்டது..இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு அணிகள் அறிமுகம் செய்யப்பட்டு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது. திருக்குறள் ஒரு வாழ்வியல் களஞ்சியம். திருக்குறளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விளையாட்டு நடத்தப்பட்டது.

நிகழ்வில் மாணவர் நல மைய இயக்குநர் சீமான் இளையராஜா வரவேற்றார். பதிவாளர் (பொ) தியாகராஜன், கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை ஆகியோர் வாழ்த்தி பேசினர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன், திருக்குறள் வழியாக மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுக்கொடுத்து கருத்துரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் நல இணை இயக்குநர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

The post திருக்குறள் விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Thirukkural sports competition ,Thanjavur ,Thanjavur Tamil University ,Thiruvalluvan ,Student Welfare Center ,Thirukkural ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...